
புதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு. இது போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை...