Friday, August 23, 2013

Skype – இல் தோன்றும் விளம்பரங்களை தடை செய்ய வேண்டுமா?


உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இலவச வீடியோ அழைப்பு சேவையான Skype – இல் விளம்பரங்களை தோற்றுவிக்கும் வசதி அண்மைக்காலத்தில் இச்சேவையை வழங்கும் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கும் Skypeமென்பொருளினூடாக அவ்விளம்பரங்கள் தொடர்ச்சியாக தோன்றிய வண்ணமே இருக்கும்.
இவ்வாறு தோன்றும் விளம்பரங்களை நிறுத்த வேண்டுமெனின் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினை இயக்கி அதில் காணப்படும் Skype மெனுவிற்கு சென்று Privacy என்பதை கிளிக் செய்யவும்.
தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் Allow Microsoft Target ads என்பதற்கு நேரே காணப்படும் சரி அடையாளத்தை நீக்கிவிடவும்

0 comments:

Post a Comment