இணைய உலாவியிலும் விண்டோவின் startஎன்ற பட்டி போன்றவற்றிலும் உள்ள எழுத்துகளானது முன்கூட்டியே அனுமதிக்கபட்ட அளவான 100% ,125% ,150% ஆகிய அளவுகளில் மட்டுமே அதன் தோற்றம் அமைந்துள்ளன இதற்கு பதிலாக நாம் விரும்பும் அளவிற்கு மாற்றியமைக்கமுடியுமா என்பதே பெரும்பாலானவர்களின் விருப்பமாகும் ஆம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி நாம் விரும்பிய அளவிற்கு மாற்றி யமைத்திட முடியும் இதற்காக Start => Control Panel => Appearance and Personalization => Display=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
உடன்
தோன்றிடும் திரையின் வலதுபுற பலகத்தில் 100% ,125% என இரு வாய்ப்புகளில்
ஒன்று தெரிவுசெய்யபட்டிருக்கும் இடதுபுற பலகத்தில் Set Custom Text
Size(DPI) என்ற இணைப்பிற்கான கட்டளையை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு தோன்றிடும்Customs DPI Settings என்ற உரையாடல் பெட்டியில் உள்ள Scale
என்ற அளவீடுகளை நமக்குத்தேவையான அளவிற்கு சுட்டியால் பிடித்து இழுத்து
நகர்த்தியபின் Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதன்பின்னர்
கணினியின் இயக்கத்தை நிறுத்தி இயங்க செய்தால் இணைய உலாவியிலும்
,விண்டோவின் startஎன்ற பட்டிபோன்றவற்றிலும் உள்ள எழுத்துகள் நாம்
விரும்பிய அளவிற்கு மாறியிருப்பதை காணலாம்.