கணனியின்
வன்பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து செயற்படுத்துவதில்
இயங்குதளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.இவ்வாறு விண்டோஸ் 8
இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளை இயக்கும் போது ஆரம்பத்தில் Startup ஒலி
வரும்.
எனினும் இந்த ஒலியினால் அசௌகரியம் ஏற்படுவதாகக் கருதின் அதனை
நிறுத்திவைக்கும் வசதியும் கூடவே தரப்பட்டுள்ளது. அவ்வாறு குறித்த ஒலியினை
நிறுத்துவற்கு பின்வரும் படிமுறைகளைக் கையாள்க.
1. முதலில் கணனியின் Desktop பகுதியில் Right-click செய்து தோன்றும் மெனுவில் Personalize என்பதனை தெரிவு செய்யவும்.
2. தொடர்ந்து தோன்றும் விண்டோவில் காணப்படும் Sounds இணைப்பினை அழுத்தவும்.
3.தோன்றும் புதிய விண்டோவில் தென்படும் Play Windows Startup sound
என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான அடையாளம் தென்படும். அதனை
நீக்கிவிட்டு Apply பொத்தானை அழுத்தவும்.
|
0 comments:
Post a Comment