• தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப வரலாற்றினை 4 முக்கிய கால கட்டங்களாகப் பிரிக்கமுடியும்.
1' இயந்திர யுகத்திற்கு முன்னைய காலம் (1450 இற்கு முதல்)
2' இயந்திர யுகம் (1450-1840)
3' மின்னியல் இயந்திர யுகம் (1840-1940)
4' இலத்திரனியல் யுகம் (1940 முதல்)
• கி.மு. 3000 வருடங்கள் அளவில் முதலாவது கணித உபகரணமான Abacus சீனர்களால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
•
1642 இல் Blaise Pascal என்பவரால் முதலாவது பொறிமுறைக் கணிப்பான்
((Mechanical Calculator) பஸ்கலைண் ((Pascaline) இயந்திரம் கண்டு
பிடிக்கப்பட்டது. இதன் மூலம் கூட்டலும் கழித்தலும் மாத்திரம் செய்யக்
கூடியதாகவிருந்தது.
•
1674 இல் Gottfried Wilhelm Von Leibnitz என்ற ஜேர்மானிய விஞ்ஞானி
Pascaline இயந்திரத்தை மறுசீரமைத்து பெருக்கல் மற்றும் பிரித்தல்
போன்றவற்றையும் செய்யக் கூடிய வகையில் இதனை முன்னேற்றினார். தரவு
சேகரிப்பிற்காக துளை அட்டை (Punch Cards) என்ற எண்ணக்கரு
பிரயோகப்படுத்தப்பட்டுளள்ளது.
•
1830 இல் Charles Babbage என்பவரால் கணித செயற்பாடுகள் மேற்கொள்ளக் கூடிய
வகையிலும் தரவுகளைச் சேமிக்கக் கூடிய வகையிலுமான பகுப்பாய்வுப் பொறி
(Analytical Engine) கண்டுபிடிக்கப்பட்டது. இன்று பாவனையிலுள்ள கணனிகளில்
காணப்படும் சாராம்ச மாதிரி ((Input, Process, Output) எண்ணக்கருவை முதன்
முதலில் முன்வைத்தவரும் இவராவார்.
எனவே, இவர் கணனியின் தந்தை என எல்லாராலும் அழைக்கப்படுகின்றார். அவரது இவ் வேலைக்கு உதவியாகவிருந்து Lady Ada Augasta Lovelace முதலாவது கணனி நிரலர் (computer Programmer) என அழைக்கப்படுகின்றார்.
எனவே, இவர் கணனியின் தந்தை என எல்லாராலும் அழைக்கப்படுகின்றார். அவரது இவ் வேலைக்கு உதவியாகவிருந்து Lady Ada Augasta Lovelace முதலாவது கணனி நிரலர் (computer Programmer) என அழைக்கப்படுகின்றார்.
• 1906 இல் Forest என்பவரால் வால்வு கண்டுபிடிக்கப்பட்டமை நவீன கணனி தொழில் நுட்பத்திற்கு அடித்தளமிட்டதாக அமைகிறது.
• 1939 இல் Howard பல்கலைக்கழக பேராசிரியரான (Howard Aiken) என்பவரால் முதலாவது தன்னியக்க கணனி இயந்திரமான Automatic Sequence Controlled Calculator அல்லது Mark 1உருவாக்கப்பட்டது.
•
1946 இல் உருவாக்கப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and
Computer) எனும் இயந்திரம் முதல் இலத்திரனியல் - எண்ணியல் கணனியாக
அறிமுகப்படுத்தப்பட்டது.
• 1949 இல் நிர்மாணிக்கப்பட்ட EDVAC (Electronic Discrete Variable Automatic Computer)எனும் இயந்திரம் சேமிக்கப்பட்ட கட்டளைத் தொகுதியை உபயோகப்படுத்திய முதலாவது எண்ணியல் கணனியாகக் (Digital Computer) கருதப்படுகின்றது.
• 1949 இல் நிர்மாணிக்கப்பட்ட EDVAC (Electronic Discrete Variable Automatic Computer)எனும் இயந்திரம் சேமிக்கப்பட்ட கட்டளைத் தொகுதியை உபயோகப்படுத்திய முதலாவது எண்ணியல் கணனியாகக் (Digital Computer) கருதப்படுகின்றது.
• 1940 - 1956 வரையிலான காலப்பகுதி கணனியின் முதலாவது பரம்பரையாகக் கருதப்படுகின்றது. 1947 இல் மின்மப் பெருக்கிகளின் (Transistor) தோற்றத்துடன் கணனியின் முதலாவது பரம்பரை முடிவுக்கு வித்திடுகின்றது.
• மின்மப் பெருக்கிகளினால் (Transistor) உருவான கணனிகள் இரணடாம் பரம்பரைக்குரிய கணனியாகக் கருதப்படுகின்றது.
• 1964 இல் மின்மப் பெருக்கிகளின் ஒன்றினைப்பினால் உருவான ஒன்றிணைக்கப்பட்ட சுற்றுக்களின் (IC-Integrated Circuit) தோற்றத்துடன் கணனியின் அளவு மற்றும் விலை என்பன குறைந்ததுடன் அவற்றின் வேகம் அதிகரித்தது. ஒன்றிணைக்கப்பட்ட சுற்றுக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கணனிகள் 3ம் பரம்பரைக்குரியவையாகும்.(1964 - 1971) காலப் போக்கில் ஆயிரக்கணக்கான ஒன்றிணைக்கப்பட்ட சுற்றுக்கள் செய்யும் வேலையினைச் செய்யக் கூடிய வகையில் (Silicon Chips)தயாரிப்பதற்கு இலத்திரனியற் தொழிநுட்பம் மேலும் விருத்தியடைந்தது. இதன் பிரதிபலனாக LSI (Large Scale Integration) மற்றும VLSI (Very Large Scale Integration) போன்ற chips கள் உருவாகின.
• இக்கால கட்டத்தினுள் ஆயிரக்காணக்கான ஒன்றிணைக்கப்பட்ட சுற்றுக்கள் Slicpn chip ஒன்றிற்குள் உள்ளடக்கக் கூடிய வகையில் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடையத் தொடங்கியதும் நுண்செயலி (Micro Processor) தோன்றியது. இந் நுண் செயலிகளை உபயோகப்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட கணனிகளின் வேகம் மற்றும் செயற்றிறன் என்பன குறிப்பிடத்தக்களவு அதிகரிதத்துடன அதன் அளவும் விலையும் படிபபடியாகக குறைவடைநத் து. 1975 இல MIT நிறுவனத்தின் மூலம் ALTAIR 8800 என்ற கணனி நிர்மாணிக்கப்பட்டது. 1981 இல் IBM நிறுவனத்தினால் IBM-PC எனும் பெயரில் முதலாவது தனிநபர் கணனி உருவாக்கப்பட்டது. இதன் apple கணினி நிறுவனத்தினால் 1984 இல் Macintosh கணனி உருவாக்கப்பட்டமை கணனி வரலாற்றில் ஏற்பட்ட மிக முக்கிய மைல் கல்லாகும்.
• நான்காவது பரம்பரைக்குரிய கணனி பயனர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான வகையில் அமைந்ததுடன் வரைபட இடைமுக (GUI - Graphical User Interface) வடிவில் அபிவிருத்தி செய்யக் கூடியதாகவிருந்தது.
• Apple மற்றும் IBM கணினி நிறுவனங்கள் தனிநபர் கணனி உற்பத்தியாளர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்கின. IBM நிறுவனத்தின் நுண்செயலி வழங்குநராக Intel நிறுவனம் இருந்தது. Intel®, Cyrix®, IDT®, AMD® மற்றும Motorola போன்ற கணினி நிறுவனங்களும் நுண்செயலிகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தன.
0 comments:
Post a Comment