CMOS பற்றி தெரிந்து கொள்ள !....
கணினியின் Motherboard இல் காணப்படும் நினைவகக் கூறுகளில் ஒரு பகுதியாக
அமைப்பு நினைவகத்தை கருதலாம்.இந்த நினைவகமானது குறைந்தளவில் மின்வலுவை
பயன்படுத்தும் CMOS சில்லுகளின் மூலமே உருவாக்கம் பெற்றுள்ளது.CMOS என்பதன்
விரிவாக்கம் Complementary Metel Oxide Silicon என்றவாறு அமையும்.CMOS
Chip இற்கு கணினியின் மின் இணைப்புடன் தொடர்பின்றி தொடர்ச்சியாக பற்றரி
மூலம் மின்வலு வழங்கப்படும்.இந்த மின்வலுவானது Motherboard இல்
இணைக்கப்பட்டுள்ள சிறிய பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்த சிறிய
பற்றரி மூலம் பொதுவாக வழங்கப்படும்.இந்தச் சிறிய பற்றரி சுமார் ஐந்து
வருடங்களுக்கு மின்வலுவை வழங்கும் திறனைக் கொண்டுள்ள போதும் மூன்று
வருடங்களுக்கு மேலாக கணினியில் குறித்த பற்றரி பாவிக்கப்பட்டால் அதனை
மாற்றுவது பொருத்தமானதாகும்.
CMOS ஆனது கணினி பற்றிய அடிப்படை தகவல்களான கணினியில் குறித்த பற்றரி
பாவிக்கப்பட்டால் அதனை மாற்றுவது பொருத்தமானதாகும்.CMOS ஆனது கணினி பற்றிய
அடிப்படைத் தகவல்களான கணினியில் இணைக்கப்பட்டுள்ள வன்தட்டுக்களின்
வகை,எண்ணிக்கை,நினைவக அளவு,நினைவக அமைப்பு,கணினியின் நேரம்,திகதி மற்றும்
வன்பொருள் அமைப்புக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்திருக்கும்.இந்த Settingsஐ
கைமுறையாகவோ (Manual) அல்லது தன்னியக்கமாகவோ மாற்றமுறச் செய்ய
முடியும்.CMOS தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும்Chipகள் மின்
வலுவை மிகவும் வினைத்திறனாக குறைந்தளவில் பாவிப்பது மிகப் பெரிய
அனுகூலமாகும்.கணினிகள் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் இந்தத்
தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை.இதற்கு இத் தொழில்நுட்பம்
அப்போதைய நிலையில் மிகவும் உயர் செலவுடையதாக காணப்பட்டதே காரணமாகும்.
பின்னர் IBM நிறுவனத்தால் இது எல்லா கணினிகளிலும் சேர்க்கப்பட்டது.CMOS
Chip மற்றும் அதனோடு இணைந்த பற்றரி ஆகிய இரண்டையும் சேர்த்து "PC's CMOS"
என அழைக்கப்பட்டது.ஆனாலும் இந்தப் பெயரும் நீண்ட நாட்களுக்கு நிலைக்க
வாய்ப்பேற்படவில்லை.வேறு நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்பட்ட கணினிகளில்
இந்த Chip மற்றும்
அதனோடு சேர்ந்தால் போல் பற்றரியும் காணப்பட்டதால் இப்பெயர் வழக்கிலிருந்து
ஒழிந்தது.
CMOS Setting ஐ மாற்றிக் கொள்ள !......
முதலில் CMOS
இல் மாற்றங்களை செய்ய எமக்கு என்ன தேவை உள்ளது என்பது பற்றி நாம் ஆராய
வேண்டியுள்ளோம்.அடிப்படையாக உங்கள் கணினியின் வன்பொருள் தகவு நிலைபற்றியும்
தொகுதியின் (System) மொத்த இயக்கத்தை இயைபாக்கவுமே இவ்வாறாக நீங்கள்
மாற்றங்கள் செய்ய முனையலாம்.வன்தட்டுக்கள் (Harddisk) பொதுவாக IDE ஊடாக
இணைக்கப்படும்.வன்தட்டுக்கள் ஒழுங்காக இயங்குவதற்கு அவை CMOS Setup இனூடாக
இயைபாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.SCSI மூலம் தொடுக்கப்படும் தட்டுக்கள்
இவ்வாறு இயைபாக்கப்பட வேண்டிய அவசியமில்லை.ஏனெனில் அவை BIOS (Basic Input
Output System) உடன் ஏற்கனவே இயைபாக்கப்பட்டிருக்கும்.கணினியின்
தொழிற்பாட்டில் CMOS இன் Setting தாக்கத்தை உண்டு பண்ணும்.CMOS இன் ஊடாக
கணினியின் நினைவகம் எந்தளவில் இயங்குகிறது.தற்காலிக சேமிப்பு தன்மை
துலங்கல் அடையச் செய்யப்பட்டுள்ளதா,PCI தொடுப்பு
கள்
எந்தளவு வேகத்தில் இயங்கவேண்டும் போன்ற பல விடயங்களை மாற்றி
அமைக்கலாம்.Menu ககைள் கொண்டுள்ள CMOS Setup மூலமாகவே CMOS இல் மாற்றங்களை
உண்டுபண்ண முடியும்.இது Chipset உடன் இணைந்தாற் போல உங்கள் BIOS இல்
அமைப்புக்களை மாற்றங்களுக்கு உட்படுத்த கூடியது.CMOS இன் Setup பகுதிக்கு
விசைப்பலகையிலுள்ள சில விசைகளை அல்லது ஒரு விசையினை கணினி தொடங்கும்
நிலையில் அழுத்த வேண்டும்.CMOS Setup ஐப் பெற்றுக் கொள்ள நாம்
அழுத்தவேண்டிய விசைகளின் சேர்ககை கணினி தயாரிப்பாளர்களிடையே
வேறுபடும்.சாதாரணமாக பயன் படுத்தப்படும் விசைகள் (delete, Esc, F1, F2, F4)
அல்லது எந்த விசையை அழுத்தினால் CMOS Setup இந்கு செல்லலாம்
என்ற விடயம் கணினி தொடக்கப்படும் போது திரையில் காட்சியாகும்.(கணணி
விண்டோஸ் லோடிங் ஆகும் முன்னர் )
இதன் மூலம் CMOS Setting சென்று CMOS ஐ மாற்றிக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment