முதலில் பிரிண்டர் online னில் இருக்கிறதா என சோதித்தப் பிறகு, Print Spooler Window ஐ திறந்து பார்ப்போம்.
இது வழக்கமாக task bar Notification Area வில் ஒரு பிரிண்டர் ஐகானுடன் இருக்கும், இதை சொடுக்குவதன் மூலமோ அல்லது Printers & Faxes சென்று அந்த குறிப்பிட்ட பிரிண்டரை திறப்பதன் மூலமாகவோ Print Spooler Window வை திறக்க முடியும்.
இதில் queue வில் உள்ள டொக்குமெண்டுகள் பட்டியல் இருக்கும். இதை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது வழக்கம். ஆனாலும் queue வில் உள்ள ஒரு சில டொக்குமெண்டுகள் டெலிட் ஆகாமல் அடம்பிடிக்கும். பொறுமையிழந்து கணினியை ரீ-ஸ்டார்ட் செய்த பிறகே queue வில் உள்ள அனைத்து டொக்குமெண்டுகளும் டெலிட் ஆக வாய்ப்புள்ளது.
இதனை எளிதாக்க ஒரு வழி,
Start க்கு சென்று Run ல் cmd என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்பொழுது MS-Dos prompt விண்டோ திறக்கும் இதில் கீழ்கண்ட வரிகளை ஒவ்வொன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
net stop spooler
del c:\windows\system32\spool\printers\*.shd
del c:\windows\system32\spool\printers\*.spl
net start spooler
0 comments:
Post a Comment