Start க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்பொழுது ரெஜிஸ்டரி எடிட்டரில்
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control
என்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள "WaitToKillServiceTimeout" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.
வழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.
சில ஃபைல்களை ஒரு ஃபோல்டரில் copy செய்யும்பொழுது, சிலசமயம், ஏற்கனவே அதே பெயரில் ஃபைல்கள் அந்த ஃபோலடரில் இருந்தால், ஒரு கன்ஃபர்மேஷன் டயலாக் பாக்ஸ் வரும். இதில் 'Yes, No and Yes to all' ஆகியவை இருக்கும். ஆனால். 'No to all' கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?
ரொம்ப சுலபம்.
Shift Key அழுத்திக்கொண்டு 'No' பட்டனை கிளிக்குங்கள்..
0 comments:
Post a Comment