Friday, June 25, 2010

Software உதவி இல்லாமல் வீடியோக்களை ஒன்றிணைக்க !

நாம் கணணியைப் பொறுத்த வரை எந்த சாப்ட்வேர் உதவியுமில்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது இருந்தாலும் நம் விண்டோஸ் கணணியைப் பொறுத்தவகையில் விண்டோஸ் கணனியில் உள்ள DOS யை பயன்படுத்தி
எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளாக உள்ள வீடியோக்களை ஒரே கோப்பாக இணைக்கலாம்.
குறிப்பாக இணையத்திலிருந்து பெரிய கோப்புகள் சிறு சிறு பகுதிகளாக இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கும். பொதுவாக அவை *.001, *.002 என்ற முடிவு கொண்ட கோப்புகளாக இருக்கலாம்.
தரவிறக்கிய அந்த பகுதிகளை மென்பொருட்களின் உதவியின்றி காமண்ட் பிராம்ப்டின் உதவியுடன் இணைக்கலாம்.


1. உதாரணமாக நம் கணணி வன்தட்டின் D: ல் test என்ற கோப்பறையில் part1.mpg, part2.mpg என்ற இரண்டு கோப்புகள் உள்ளதாக கொள்வோம். அவற்றின் மேல் வலது கிளிக் செய்து அதன் பெயரை a என்றும் மற்றதை b என்றும் பெயர் மாற்றிக் கொள்வோம். (அதன் முடிவு(extension) இல்லாமல் பெயர் மாற்றம் செய்யவும்.) அல்லது காமண்ட் பிராம்ப்டில் ren part1.mpg a, ren part1.mpg b என்று தரவும்.
2. கணணியின் காமண்ட் பிராம்ப்டினை திறந்து கொள்ளவும். start->run->"cmd" or "command" அல்லது winkey+r பிறகு cmd அல்லது command என்று டைப் செய்யவும்.
3. இணைக்க வேண்டிய வீடியோக்கள் இருக்கும் கோப்பறைக்கு செல்லவும். உதாரண்மாக cd d:/test (cd -change directory)
4. இப்போது தான் முக்கியமான பகுதி. copy /b a + b final.mpg என்று டைப் செய்து எண்டர் தரவும். இப்பொது 1 files copied என்று தெரியும் வரை காத்திருக்கவும். இப்போது கமாண்ட் பிராம்ப்ட்டை மூட exit என்று தரவும். அவ்வளவு தான். final.mpg என்ற வீடியோவில் இரண்டு வீடியோக்களும் சேர்ந்து அடுத்தடுத்து பிளே ஆகும்.
மேலே உள்ளபடி வீடியோக்களை இணைப்பதில் எதேனும் உங்களுக்கு அசௌகரியம் இருந்தால் இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் பெயர் Easy Video Joiner. இது முற்றிலும் இலவசமான மற்றும் எளிய மென்பொருள்.
இதனை கொண்டு AVI, MPEG (MPG), RM (Real Media) or WMV/ASF (Window Media) போன்ற பல உருவில் இருக்கும் வீடியோக்களை ஒரு பெரிய வீடியோ கோப்பாக மாற்றி வரிசையாக எந்தவித இடையூரும் இன்றி காணலாம். எளிமையாக வீடியோக்களின் வரிசையையும் மாற்றிக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment