உதாரணமாக ஒரு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை முறைப்படி ஒழுங்காக வைக்காமல் ஒவ்வோரிடத்தில் சிதறிக் கிடந்தால் தேவையான நேரத்தில் ஒரு பைலைத் தேடிப் பெற எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்? முறையான ஒரு பைல் சிஸ்டம் இல்லையாயின் இது போன்ற ஒரு நிலையையே கணனியும் எதிர்கொள்ளும்.
வீடுகளிலோ அலுவலகத்திலோ பலரும் பல விதமான முறைகளில் பொருட்களை ஒழுங்குபடுத்துவது போல கணனியிலும் பைல்களை ஒழுங்கு படுத்துவதில் FAT 16, FAT 32, NTFS எனப் பல வழி முறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் உள்ளன.










