Ubuntu
பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System
ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர்
விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் மூலம்
இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கணினியில் Ubuntu OS-இன் ISO File இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது இங்கே டவுன்லோட் செய்து கொள்ளவும். Ubuntu 12.04 LTS 32 bit
அடுத்து உங்கள் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகி விடுங்கள். இப்போது Pen Drive Linux's USB Installer என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இதை
Run செய்யும் போது Step-1 இல் எந்த OS என்று கேட்கும், உங்கள் கணினியில்
ஏற்கனவே நீங்கள் டவுன்லோட் செய்துள்ள Ubuntu Version-ஐ இதில் நீங்கள்
தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்து நீங்கள் தெரிவு செய்த OS உங்கள் கணினியில் எங்கு உள்ளது என்று Step-2 மூலம் தெரிவு செய்ய வேண்டும்.
Step-3 யில் உங்கள் பென் டிரைவை தெரிவு செய்ய வேண்டும். [Pen Drive க்கு என்ன லெட்டர் என்று பார்த்து தெரிவு செய்யவும்]
Step- 4 தேவை இல்லை.
இப்போது
Create என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவே சிறிது நேரத்தில் நீங்கள்
Process முடிந்த பின், நீங்கள் டவுன்லோட் செய்த Ubuntu-வை உங்கள் Pen Drive
மூலம் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம்.
USB
மூலம் Boot ஆகவில்லை என்றால், கணினி ஆன் ஆகும் போது [Press F2 For BIOS
எனும்போது ] F12 என்பதை அழுத்தவும். இப்போது Boot Menu வரும் அதில் "USB
Boot" என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
இப்போது பென் டிரைவ் உங்கள் கணினியில் செருகி இருக்க வேண்டும். இனி இன்ஸ்டால் ஆகி விடும்.
0 comments:
Post a Comment