Sunday, July 25, 2010

உங்களுடைய கணனியின் நினைவகத்தை(RAM) மேம்படுத்த வேண்டுமா?

animated gif





கம்பியூட்டரின் நினைவகம் என்று அழைக்கப்படுவது ரேம் (Ram) நினைவகத்தைத்தான் குறிக்கிறது. சாதாரண அலுவலக பயன்களுக்கு கம்பியூட்டரை பயன்படுத்தும் போது ரேம் நினைவகத்தின் அளவை கருத்தில் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட ரேமின் அளவை ஆர்வமுடன் மல்ட்டி மீடியா வந்த பிறகு கவனிக்கவும் பயன்படுத்தவும் தொடங்கி விட்டனர்.
கணிப்பொறி பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட பணியை விரைவாகச் செய்து முடிக்கக் கூடிய கட்டளையை பிராசசருக்குக் கொடுப்பதற்கான தற்காலிக நினைவகமாகச் செயல்படுவது "ரேம்' (சுயுஆ) ஆகும்.

இதனால் கட்டளைகள் மற்றும் தகவல்களைப் பிராசசர் தேடாமல் விரைவாகப் பணிகளைச் செய்து முடிக்கிறது. ஹார்டு டிரைவ் என்பது கணிப்பொறியில் தகவல்களை மென்பொருள்களை முழுமையாகப் பதிவு செய்து எந்த நேரத்திலும் கவனமாக பாதுகாப்பதாகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல் நடக்கும் போது அதன் இயக்கத்திற்குத் தேவையான கட்டளைகளை தகவல்களைப் பதிவு செய்யப் பயன்படுவதே ரேம் நினைவகம்.
விண்டோஸ் இயக்கச் சூழலில் நிறுவப்பட்ட தனி நபர் கணினிகளுக்கு 64 எம்.பி. ரேம் நினைணிவஞ்கஞும் போதுமானதாக உள்ளது. ஆனாலும் விண்டோஸ் எக்ஸ்பி இயக்கச் சூழலுக்கு 128 எம்.பி. நினைவகம் இருந்தால் நல்லது. அப்போதுதான் கம்ப்யூட்டரின் செயல்பாடு விரைவாக இருக்கும். இப்போது கிராபிக்ஸ்இ அனிமேஷன் போன்ற பயன்பாடுகளுக்கு நினைவகம் அதிக அளவில் தேவைப்படுகின்றது. அவ்வாறு கணினியின் செயல்பாடுகளுக்குப் போதுமான ரேம் நினைவகம் கிடைத்தால் ஹார்டுடிரைவிலேயே அதற்கான பகுதி ஒதுக்கப்படுகிறது.
அவ்வாறு தகவல்களை அங்கிருந்து பெற முடிவது ஸ்லாப்பிங் என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக ரேம் நினைவகத்தில் தகவல்களை பெற முடிவது "ஸ்வாப்பிங்' என்று அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக ரேம் நினைவகத்தில் தகவல் எந்த இடத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் ஒரே சீரான நேரத்தில் தகவலைத் தேவைப்படும்போது பெற முடியும்.


கணிப்பொறியில் உள்ள நினைவகம் போதுமானதாக இல்லையெனில் அதிகரிக்க வேண்டும். கணிப்பொறி இயக்கத்தில் இருந்தால் முதலில் நிறுத்த வேண்டும். பின்னர் மின் இணைப்பினைத் துண்டிக்க வேண்டும். மின் கசிவைத் தடுக்க அதற்கான கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கேபினெட்டைத் திறந்து நினைவக மோடுல்கள் அமைந்திருக்கும் மெமரி ஸ்லாட்டுகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். பின்னர் புதிய நினைவக போடுல்களை எடுத்துக் கொண்டு சிம் டிம் வகையான கார்டா என்று பார்த்து அதற்குரிய ஸ்லாட்டில் சாய்ந்தது போன்று வைக்க வேண்டும்.
கம்பியூட்டர் தானாகவே நினைவகத்தை புரிந்து கொள்கிறதா? நினைவகத்தின் அளவு கூடியிருக்கிறதா? என சிஸ்டம் பிராப்பர்ட்டிஸ் தேர்வுகளில் சென்று பார்க்க வேண்டும். இதன் பின்னர் கம்பியூட்டர் இயக்கத்தை நிறுத்தி விட்டு மதர்போர்டு கேபினெட்டை சரிவர மூடி விட்டு கம்பியூட்டர் இயக்கத்தை தொடரலாம்.
free animated gifs crocodiles free animated gifs crocodilesfree animated gifs crocodilesfree animated gifs crocodiles

0 comments:

Post a Comment