Sunday, October 4, 2009

WINDOWS Update (அப்டேட்) செய்வதற்கு !

Microsoft  நிறுவனம் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 
Windows update செய்வதற்கு   
Windows update program னை இயக்க Start பட்டன் கிளிக் செய்து All Programs பட்டனை அழுத்திக் கிடைக்கும் மெனுவில் Programs பிரிவில் Windows Update என்பதில் கிளிக் செய்யவும். உடனே விண்டோஸ் தானாக இன்டர்நெட் இணைப்பினை உங்கள் கம்ப்யூட்டருக்குப் பெற முயற்சி செய்திடும். ஏற்கனவே கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பிற்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பதிந்து வைத்திருந்தால் இணைப்பு கிடைக்கும். இல்லையேல் அவற்றைக் கேட்கும்.




உங்களுடைய கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் அப்டேட் தற்போது தேவையா என அறிய மைக்ரோசாப்ட் விண்டோஸ் அப்டேட் பக்கத்தில் Scan for Updates என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதைக் கிளிக் செய்தவுடன் விண்டோஸ் உங்கள் சிஸ்டத்தை ஸ்கேன் செய்து அண்மைக் காலத்தில் வெளியான அப்டேட் பைல் வரை உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் ஏற்கனவே பெற்றுவிட்டதா? எனக் கண்டறியும். இந்த சோதனை முடிந்தவுடன் மூன்று வகையான அப்டேட் பைல்கள் உள்ளது எனக் காட்டப்படும். அவை Critical Updates, Windows XP, மற்றும் Driver Updates என வகைப்படுத்தப்பட்டிருக்கும். நீங்கள் இந்த பட்டியலில் உள்ள அப்டேட் பைல்களில் தேவையானது என நீங்கள் கருதுபவற்றை டிக் செய்து உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேர்ந்தெடுக்கலாம். பின் ஓகே கிளிக் செய்தால் அவை தானாக உங்கள் கம்ப்யூட்ட்ரை அப்டேட் செய்திடும். இடையே உங்களுக்கு ஒரு டயலாக் பாக்ஸ் தரப்பட்டு லைசன்ஸ் உங்களிடம் உள்ளதா என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படும். அவற்றிற்கெல்லாம் யெஸ் கிளிக் செய்தால் நம் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும்.

மைக்ரோசாப்ட் இணைய தளம் செல்லும் வேலை எல்லாம் எனக்கு வேண்டாம் என நீங்கள் எண்ணினால் Automatic Updates என்பதில் செட் செய்துவிட்டால் அப்டேட்டுக்குத் தேவையான பைல்கள் தானாக டவுண்லோட் செய்யப்படும். அதன்பின் டாஸ்க்பாரில் ஒரு மஞ்சள் நிற பலூன் தோன்றி அப்டேட் பைல்கள் உள்ளன. அவற்றை இன்ஸ்டால் செய்யலாமா என்று உங்களிடம் டயலாக் பாக்ஸ் மூலம் கேட்கும். அதற்கான மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்குத் தரப்படும். அவை Settings, Remind Me Later, மற்றும் Install இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செலக்ட் செய்திடலாம். ஆட்டோ அப்டேட் செட் செய்திட கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்.

1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் செல்லவும். கண்ட்ரோல் பேனல் பிரிவுக்கு இடது பக்கம் உள்ள இடத்தில் Classic View பட்டனில் கிளிக் செய்திடவும். அங்கு உள்ள சிஸ்டம் ஐகானில் இருமுறை கிளிக் செய்தால் சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Automatic Updates டேபில் கிளிக் செய்திடவும். பின் Automatic Recommended என்பதைத் தேர்ந்தெடுத்த பின்னர் கீழாக உள்ள நாள் மற்றும் நேரத்தை செட் செய்திடலாம். குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் கம்ப்யூட்டர் தானாக மைக்ரோசாப்ட் இன்டர்நெட் தளம் சென்று பைல்கள் தேவையா எனக் கண்டறிந்து டவுண்லோட் செய்து இயக்கும்.

0 comments:

Post a Comment