Tuesday, August 11, 2009

Windows XP சில பயனுள்ள தகவல்


விண்டோஸ் எக்ஸ்பி என்பது இன்று பரவலாகப் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. இந்த சிஸ்டம் குறித்து ஒரு சிலரே அறிந்த பயனுள்ள சில விஷயங்களை இங்கு காணலாம்.



1. உங்கள் சிஸ்டம் இயக்கப்பட்டு எவ்வளவு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறது? யார் பெயரில் இந்த சிஸ்டம் உள்ளது? இறுதியாக எப்போது ஹார்ட் டிஸ்க் பார்மட் செய்யப்பட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கப்பட்டது? இதன் பிராசசர், சர்வீஸ் பேக் எண், கம்ப்யூட்டரின் உரிமையாளர், எதன் பெயரில் இது பதியப்பட்டுள்ளது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் வேண்டுமா? எக்ஸ்பி புரபஷனல் எடிஷனில் டாஸ் கமாண்ட் ப்ராம்ட் பெற்று அதில் systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும்.



2. நீங்கள் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் தொட்டிக்குத் தான் செல்கிறது. அப்படிச் செல்லாமல் அழிக்கப்பட வேண்டும் என்றால் ஷிப்ட் கீ அழுத்தி அழிக்க வேண்டியதிருக்கிறது. இதற்குப் பதிலாக இந்த ரீசைக்கிள் பின் பிசினஸே வேண்டாம்; நான் மொத்தமாக அழிக்கப்பட வேண்டியதைத்தான் அழிக்கிறேன். நான் விரும்பும்படி கம்ப்யூட்டர் பைலை அழிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழ் குறித்துள்ளபடி செட் செய்திடவும். ஸ்டார்ட் மெனு சென்று அதில் run விண்டோவில் gpedit.msc என டைப் செய்திடவும். அதன்பின் User Configuration, Administrative Templates, Windows Components, Windows Explorer என வரிசையாகச் செல்லவும். இதில் Do not move deleted files to the Recycle Bin etting என்ற இடத்தைப் பார்த்து செட் செய்திடவும். இந்த விண்டோக்களில் சுற்றி வந்தால் இன்னும் சில செட்டிங்குகளுக்கான இடங்களைப் பார்க்கலாம். ஆனால் மிகக் கவனமாக செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். இல்லையேல் கம்ப்யூட்டரையே முடக்கிப் போடும் அளவிற்கான சில செட்டிங்குகளில் கை வைத்து விடுவீர்கள். ஜாக்கிரதை!


3. எக்ஸ்பி சிஸ்டம் ஸிப் பைல்களை தனி போல்டர்களாகத்தான் கையாளுகிறது. வேகமாக இயங்கும் பிராச்சர் கொண்ட கம்ப்யூட்டர்கள் என்றால் சரி; ஆனால் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர் எனில் இது கொஞ்சம் நேரம் எடுக்கும் விஷயமாக இருக்கும். எனவே அத்தகைய கம்ப்யூட்டர்களில் இந்த ஸிப் பைல்களைத் தனி பைல்களாகவே எக்ஸ்பி சிஸ்டம் நடத்தும்படி அமைக்கலாம். டாஸ் கமாண்ட் விண்டோ பெற்று கமாண்ட் லைனில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்தால் போதும். இதன் பின் ஸிப் பைல்கள் அனைத்தும் தனி பைல்களாகவே சேவ் செய்யப்படும். மீண்டும் மனது மாறி அவை போல்டர்களாகவே சேவ் செய்யப் பட்டால் பரவாயில்லை என முடிவு செய்தால் மீண்டும் கமாண்ட் ப்ராம்ப்ட்டில் regsvr32 zipfldr.dll என டைப் செய்து மாற்றி விடலாம். 

0 comments:

Post a Comment