எப்போதும்
எதற்குமே ஒரு மாற்று நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில்
முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது
DVD Drive இயங்கவில்லை என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive
மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று
இன்று பார்ப்போம்.
பென்
டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து
இருந்தோம்.
இப்போது
OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள்
கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது
இருக்கட்டும்.