முதலில்
உங்களுக்கு ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய செயலியை திறந்து கொள்ளுங்கள்
பின்னர் தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு
கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள்.
Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடையங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
உதாரணத்திற்கு இப்போது மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று
Edit -> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில்
தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும். கீழே உள்ள படத்தை
பார்க்க.
http://tamilinayathalam.blogspot.com/2012/10/screen-shot.html

http://tamilinayathalam.blogspot.com/2012/10/screen-shot.html
அடுத்து
ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது
முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் பெயின்ட் போன்ற
மென்பொருள்குச் சென்று Edit -> Paste என்று சொடுக்குங்கள். இப்போது
திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர்
வழமைபோல சேமித்துக்கொள்ளலாம். கீழே இருக்கும் படம் அவ்வாறு
சேமிக்கப்பட்டதே!

உங்களுக்கு ஏதாவது ஒரு பகுதியை வெட்டியெடுக்க வேண்டும் என்றால் பெயின்டில் அதற்காக உள்ள வசதி மூலம் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment