Thursday, May 22, 2008

(கணினி) தகவல்கள்


01) யூனிகோட் (Unicode) வசதியை உங்கள் கணினியில் நிறுவ கீழ்க்கண்டவாறு செய்யவும். இது விண்டோஸ் XP க்கு பொருந்தும்
1. Go to control panel / Regional and Language options
2. Check on “Install fonts for complex scripts…”
3. Click on “Apply”
4. System will prompt for OS CD.
5. Insert the CD and click “OK”.
6. Reboot the system

பின்பு உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியை control panel / Regional and Language/Details options சென்று தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொள்ளவும். உங்கள் Task Bar இன் வலதுபுறம் Language Bar தெரியும். அங்கு Click செய்து தேவையான மொழியை தெரிவு செய்து கொள்ளவும். நீங்கள் ஆங்கிலத்தை தெரிவு செய்தால் EN என்றும் தமிழை தெரிவு செய்தால் TA என்றும் தோன்றும்.




03) உங்கள் கணினியின் பொதுத் தகவல்களை (Configuration) அறிய RUN ---> msinfo32.exe என்று கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்.

02) ப்ரீவேர் (Freeware software) சாப்ட்வேர் என்றால் முற்றிலும் இலவசமாக நமக்கு கிடைப்பது. ஷேர்வேர் சாப்ட்வேர் (Shareware Software) என்றால் ஒரு குறிப்பிட்ட காலம் இலவசமாக பயன்படுத்திவிட்டு பிடித்திருந்தால் பின் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வது. இது பெரும்பாலும் அதிக விலை இருக்காது மற்றும் இணையத் தளத்திலிருந்து இறக்கம் செய்வது போலிருக்கும்.

04) உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் யூசெர் நேம், பாஸ்வோர்ட் இல்லாமல் நேரிடையாக செல்வதற்கு கீழ்க்கண்டவாறு செய்யவும். இது விண்டோஸ் எக்ஸ்பீக்கு பொருந்தும்.

Start---> Run---> control userpasswords2 என டைப் செய்து ok கொடுக்கவும்.

எந்த யூசெர் நேமிலிருந்து நீங்கள் செல்ல வேண்டுமோ அந்த யூசெரை செலக்ட் செய்து கொண்டு "Users must enter a user name and password to use this computer" என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிட்டு Apply செய்யவும். பின் தோன்றும் விண்டோசில் உங்கள் கடவுச்சொல்லை (Password) இரு முறைக் கொடுத்து OK செய்து மூடி விடவும்.
இனி நீங்கள் அடுத்த முறை கணினியை இயக்கும்போது யூசெர் நேம், பாஸ்வோர்ட் இல்லாமல் நேரிடையாக உங்கள் கணினி விண்டோசிற்கு சென்றுவிடும்.

05) Remote Desktop Connection என்பது உங்கள் கணினியிலிருந்து அதே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கணினியை இணைப்பது. இதை Start ---> Program --> Accessories ---> Remote Desktop connection சென்று பெறலாம். உங்கள் கணினியிலிருந்து அடுத்த கணினியை இப்படி இணைத்து அந்த கணினியை உங்களது முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரலாம். இணைக்கும்போது IP Address மற்றும் யூசெர்நேம், பாஸ் வோர்ட் தரவேண்டும்.

அப்படி இணைத்த கணினியிலிருந்து உங்கள் கணினியின் Drive களை பயன்படுத்த கீழ்க்கண்டவாறு செய்யவும்.
IP அட்ரஸ் கொடுக்கும் விண்டோசில் Options என்பதை கிளிக் செய்யவும்.

பின் Local Resources என்பதைக் கிளிக் செய்து Local devices and resources என்பதில் More என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு தேவைப்படும் Drive களை தேர்தெடுத்துக் கொண்டு O.K. செய்யவும். இனி நீங்கள் Remote Desktop Connection இல் மற்றொரு கணினியை இணைத்தவுடன் அதில் உங்களின் லோக்கல் கணினியின் Drive களையும் Access செய்து கொள்ளலாம்.

கடைசியாக நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது Remote Desktop Connection ஐத் துண்டிக்க Log Off மட்டுமே செய்யவேண்டும், Shut Down செய்து விடக்கூடாது. Log Off செய்வதே சரியான வழி.

0 comments:

Post a Comment