Sunday, May 25, 2008

இணையத்தில் கோப்புகளை சேமிக்க Windows Live SkyDrive




இப்போது டிஜிட்டல் கேமரா வந்த பிறகு ஒரு குடும்ப நிகழ்ச்சி என்றா
நூறு இருநூறு என்று புகைப்படங்களை எடுத்து தள்ளி விடுகின்றனர். நாம்
எவ்வளவுதான் பாதுகாப்பாக கணினியில் படங்கள், வீடியோ, ஆடியோ உள்ளிட்ட
கோப்புகளை வைத்து இருந்தாலும், அவை பாதுகாப்பாக காலம் முழுமைக்கும்
இருக்குமா என்றால் சந்தேகம் தான்.



DVD, USB போன்றவற்றில் பேக்கப்பாக வைத்து கொள்ளலாம் என்றால் நம்
நினைவுகளை தாங்கிய கோப்புகளை உள்ளடக்கிய DVD, USB தொலைத்து போனாலோ,
சேதாரம் அடைந்தாலோ எல்லாவற்றையும் இழக்க வேண்டியதுதான். கணினியை
பொறுத்தவரை அது எந்நேரமும் Corrupt ஆகி அனைத்தும் இழக்க கூடிய சாத்திய
கூறுகள் அதிகம். இது போன்று பலர் காலம் காலமாக தமது நினைவுகளை மீது
எடுத்க்கும் விதமாக எடுத்து வைத்திருந்த புகைப்பட தொகுப்புகளை இழந்ததுண்டு.

இவ்வாறு நமக்கு முக்கியமாக உள்ள புகைப்படங்கள், வீடியோ, கோப்புகளை
இணையத்தில் ஓரிடத்தில் பாதுகாப்பாக பகுத்து வைத்து கொண்டு, உலகின் எங்கு
சென்றாலும் அவற்றை அணுக முடிந்தால்? அவற்றை எவ்வித சிரமமும் இன்றி
உலகெங்கும் உள்ள நண்பர்கள், உறவினர்களுடன் பகிர முடிந்தால்? இந்த
வசதியைத்தான் வழங்குகிறது Windows Live Sky Drive  . இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

Windows Live Sky Drive
என்பது உங்களது உபயோகத்திற்காக கோப்புகளை இணையத்தில் பாஸ்வோர்ட்
பாதுகாப்புடன் சேமித்து வைக்க உதவும் சேவை ஆகும். இதில் பப்ளிக் என்று
அனைவருடனும் உங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். பிரைவேட் என்று
நீங்கள் மட்டும் கோப்புகளை பார்க்கும் படி சேமித்து கொள்ளலாம். 'Shared'
என்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுடன் மட்டும் கோப்புகளை பகிரும்படி
சேமித்தது கொள்ளலாம்.


இதில் 25GB இடவசதி கிடைக்கிறது. தோராயமாக 1000 பாடல்கள் அல்லது
30,000 டிஜிட்டல் புகைப்படங்களை சேமித்து கொள்ளலாம். விண்டோஸ்
எக்ஸ்ப்ளோரர் போன்று எளிமையாக நிர்வகிக்கும் வடிவமைப்பில் வருகிறது.
நீங்கள் அனுமதி அளித்தால் அன்றி உங்கள் கோப்புகளை வேறு யாரும் பார்க்க
இயலாது.

உங்கள் கணினியில் இருந்தோ, இணைய உலாவி மூலமோ உங்கள் கோப்புகளை அணுகவோ,
சேமிக்கவோ முடியும். ஈமெயில் மூலமாகவோ, அல்லது மொபைல் போன்கள் மூலமாகவோ
உங்கள் புகைப்படங்கள், கோப்புகளை விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ்வில் சேமித்து
வைத்து கொள்ள முடியும்.


இது போன்ற சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்
போது விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் மேம்பட்டதாகவே விளங்குகிறது. பெரும்பாலான
கோப்பு பகிரும் தளங்களில் (File Sharing Sites) கோப்புகளுக்கு பாதுகாப்பு
இல்லை. அடிக்கடி காணாமல் பொய் விடும். ஆனால் விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ்வில்
உங்களுக்கு வழங்கப்பட்ட 25GB அளவுக்குள் கோப்புகளை பாதுகாத்து
கொள்ளலாம்.பெரும்பாலான நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை கட்டண அடிப்படையில்
வழங்குகின்றன. ஆனால் விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் முற்றிலும் இலவச சேவை.


இந்த சேவையை உபயோகிக்க Windows Live Sky Drive  ஒரு உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். அங்கே இணைய உலாவி மூலமே உங்கள் கோப்புகளை தரவேற்ற முடியும். அல்லது http://download.live.com/photogallery
சென்று புகைப்படங்கள் பராமரிக்க உள்ள பிரத்தியேக மென்பொருளை தரவிறக்கி
உபயோகிக்கலாம். உங்கள் 'My Computer' ரில் C:, D: டிரைவ் போன்று இந்த
விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவையும் நிர்வகிக்க விரும்பினால் இங்கு சென்று
http://www.ziddu.com/download/7340794/SkyDriveExplorer1.3.exe.html
ஸ்கை டிரைவ் எக்ஸ்ப்ளோரர் மென்பொருளை நிறுவி கொள்ளுங்கள். பின்பு உங்கள்
கணினியில் இருந்தே எளிதாக உங்கள் கோப்புகளை நிர்வகித்து கொள்ளலாம். இது
தொடர்பான ஸ்க்ரீன் ஷாட் களை இங்கு சென்று பார்த்து கொள்ளுங்கள்.




இதனை பற்றி முழுமையாக சில மணிநேரங்கள் செலவிட்டால் போதும். அறிந்து
கொள்ளலாம். மிகவும் உபயோகமாக இருக்கும். இதனை உபயோகிப்பதில் சந்தேகங்கள்
இருந்தால் கேட்கவும். தனி இடுகையாகவே எழுதி விடலாம்

0 comments:

Post a Comment