Thursday, May 22, 2008

விண்டோஸில் PC SUIT இல்லாமல் இணைய இணைப்பு



விண்டோஸில் PC SUIT இல்லாமல் இணைய இணைப்பு

லேப்டாப்பில் விண்டோஸ் இருப்பதால் அதனை
உப்யோகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய மொபைலில் இருந்து விண்டோஸில்
எவ்வாறு இணைய இணைப்பினை ஏற்படுத்துவது என்று தேடி ஒரு வழியாக
கண்டுபிடித்தேன்.
லினக்ஸில் இந்த பிரச்சினையே இல்லை.

என்னுடை nokia 2700 மாடலினை நோக்கியா பிசி சூட் மூலமாக இணைய இணைப்பினை
ஏற்படுத்தலாம். ஆனால் என்னுடைய வேகம் குறைந்த இணைய இணைப்பிலிருந்து
நோக்கியா பிசி சூட் தரவிறக்க அதிக நேரம் ஆகும். எனவே பிசி சூட் இல்லாமல்
இணைய இணைப்பினை ஏற்படுத்தினேன்.



முதலில் nokia connectivity cable driverஇனை கீழிறிந்து தரவிறக்கி கொள்ளுங்கள். வெறும் 7 mb தான்.

Nokia_Connectivity_Cable_Driver_eng.msi

பிறகு அதனை உங்கள் விண்டோஸில் நிறுவி கொள்ளுங்கள். அதற்கு முன்னால் உங்கள்
மொபைலினை இணைக்க வேண்டாம். அதனை நிறிவி முடித்த பின் உங்கள் மொபைலினை
இணையுங்கள்.

இப்போது runல் சென்று devmgmt.msc என்று அடித்து எண்டர் தரவும்.

ஒரு விண்டோ ஒன்று தோன்றும். அதில் modem என்பதனை கிளிக் செய்யவும். உங்களுடைய மொபைல் மாடல் அதில் காட்டும்.

அதனை இருமுறை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் Advanced டேபினை தேர்ந்தெடுக்கவும்.

அதில் உள்ள Extra initialization commands பெட்டியில்

+CGDCONT=,,"TATA.DOCOMO.INTERNET"

என்று தரவும். இதில் "TATA.DOCOMO.INTERNET" என்பது docomoவின் APNஆகும்.
உங்கள் நெட்வொர்க் ஆபிரேட்டார்க்கு தகுந்த APNனை தரவும். உதாரணத்திற்கு
vodafoneன் APN ”WWW". எனவே vodafone உபயோகிப்பவர்கள்

+CGDCONT=,,"WWW"

என்று தரவும்.

பிறகு ok கொடுத்து மூடிவிடவும். இப்போது control panelல் network and sharing centerஇனை தேர்ந்தெடுக்கவும்.

இதில் Set up new connection or network என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு Setup dial-up connection கிளிக் செய்யவும்.

அடுத்த விண்டோவில் dial-up numberல் *99# என்று தரவும். படத்தில் உள்ளவாறு
remember passwordல் check செய்யவும். பிறகு allow other people என்பதையும்
check செய்து connect செய்யுங்கள்.

அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் சுலபமாக இணைய இணைப்பினை ஏற்படுத்தலாம்.

run சென்று rasphone என்று தரவும். தோன்றும் விண்டோவில் dial செய்யவும்.


0 comments:

Post a Comment